கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு தினமும் காலையில் அப்பகுதி வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சம்பவ நாளன்று காலையில்  வேலைக்கு வழக்கம் போல அப்பகுதியில்  நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி இளைஞர் ஒருவர் அத்துமீற முயன்றுள்ளார்.

இதனால் அந்தப் பெண் பதட்டத்தில் சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்ததைக் கண்ட இளைஞர் வேகமாக அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து அந்தப் பெண் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த இளைஞர் பரமன்விளையை சேர்ந்த கவின் (25) என்பவர் என தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் கவின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் பகல் நேரத்தில் நடுரோட்டில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.