சாம்சங் நிறுவனம் இந்திய பயனாளர்களுக்கு “Big TV Days” பெயரில் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையின் வாயிலாக கேஷ்பேக் சலுகை, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, நிச்சயிக்கப்பட்ட பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்குவோருக்கு சாம்சங் கேலக்ஸி Z போல்டு 4 மற்றும் கேலக்ஸி A23 உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
கடந்த டிச,.24 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை ஜனவரி 31, 2023 வரை வழங்கப்படுகிறது. இச்சலுகைகள் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட ரிடெயில் ஸ்டோர் மற்றும் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் சாதனங்களை வாங்குவோருக்கு பொருந்தும்.
சாம்சங் நிறுவனத்தின் உயர்ரக மற்றும் பிரீமியம் டிவி மாடல்களை வாங்குபவர்களுக்கு கேலக்ஸி Z போல்டு 4 (12 ஜிபி, 256 ஜிபி) மாடல் வழங்கப்படுகிறது. அந்த அடிப்படையில் 98 இன்ச் நியோ QLED 4K டிவி (அல்லது) 85 இன்ச், 75 இன்ச் நியோ QLED 8K டிவி வாங்குவோருக்கு ரூபாய். 1 லட்சத்து 54 ஆயிரத்து 999 மதிப்புள்ள கேலக்ஸி Z ஃபோல்டு 4 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.