
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் மலை கிராமத்தில் சிந்து என்பவர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிந்துவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால் மருத்துவர் தொழில்நுட்ப பணியாளர் செல்வகுமார் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அதில் சிந்துவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும், சேயும் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.