இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் சில நிமிடங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைகிறது. சமீபத்தில் வட இந்திய தொழிலாளர்கள் குறித்த போலி வீடியோ பரவியதால் தமிழகம் மற்றும் வட இந்தியாவில் பல்வேறு விதமான பிரச்சினைகள் கிளம்பியது. வட இந்திய தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு வீடியோக்களை தடுக்கும் விதமாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில் சமூக வலைதளங்களில் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்த அவதூறு பரப்பும் விதமான போலி வீடியோக்கள் மற்றும் போலி கணக்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட 386 வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என youtube நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று 221 சட்டவிரோத கடன் செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் 61 கடன் செயலிகளை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.