தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் வருமானத்திலிருந்து 12 சதவீதம் நிர்வாக செலவுக்கு ஒதுக்கப்படும்போது மீதமுள்ள நிதியை வைத்து வாகனங்கள் வாங்க கூடாது என பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக செலவுகளுக்கு 12 சதவீதம் சட்டப்படி ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்குவது என்பது விதிமீறல் செயலாகும். கோவில் நிதியை அறநிலையத்துறையின் இதர செலவுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றமே கூறி இருக்கிறது.

அப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் சேகர்பாபு கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கி இருக்கிறோம் என கூறி விதிமீறலை நியாயப்படுத்தி பேசி இருக்கிறார். அமைச்சரின் இந்த செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மேலும் திமுக அரசின் இத்தகைய விதிமீறல்கள் செயல்களில் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.