நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் அறிவியல் முறையில் காடை வளர்ப்பு மற்றும் காடை குஞ்சுகள் உற்பத்தியில் தொழில் முனைபவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாகை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சுரேஷ், நாகை மாவட்ட நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் விஸ்வந்த், அண்ணா நாகை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் அப்பாராவ் தலைமை தாங்கி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, காடை வளர்க்கும் தொழில் முனைவோருக்கு தொடர்ந்து இந்த மையம் மூலமாக தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட 30 பணியாளர்களுக்கு காடை குஞ்சுகள் காடை வளர்ப்புக்கான முதலுதவி பெட்டகம் காடை தீவனம் போன்றவை வழங்கப்பட்டது.