குட் நைட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியவர் விநாயக சந்திரசேகர். இவர் இயக்கிய குட் நைட் திரைப்படம் எதிர்பாராத விதமாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.  மிகக் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் குட் நைட் திரைப்படம் இடம் பிடித்தது இதை தொடர்ந்து, OTT-யில் வெளியான பிறகு படம் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டாகி பலருக்கும் 2023-ல்  பிடித்தமான திரைப்படங்களில் ஒன்றாக மாறிப்போனது.

இந்நிலையில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த குட் நைட் திரைப்படத்தின் இயக்குனர் விநாயக்  சந்திரசேகர் தனது அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து இயக்க  உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான் திரைப்படத்திற்கான பணிகளை முடித்து, அது பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பின்னர் ஏ ஆர் முருகதாஸுடன் இணையும் சிவகார்த்திகேயன் இப்படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த பிறகு, விநாயக்  சந்திரசேகரன் உடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.