தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு பிளேபாய் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹாங்காங் சென்ற சிம்பு சென்னைக்கு திரும்பும் போது விமானத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு மன்மதன் படத்தில் இருப்பது போன்று இருக்கிறார். இதனால் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் மீண்டும் மன்மதன் சிம்புவை பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிம்பு மற்றும் கமல் முதன் முறையாக கூட்டணி வைத்துள்ளதால் கண்டிப்பாக படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.