தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்‌. தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ராஷ்மிகாவிடம் நிருபர்கள் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ராஷ்மிகா கண்ணடித்தபடி ஆமாம் என்று கூறினார்.

இதனால் தற்போது சுப்மன் கில் மற்றும் ராஷ்மிகா காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கன்னட நடிகர் ரக்ஷித் ரெட்டியை ராஷ்மிகா காதலித்த நிலையில் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் அடுத்த வருடமே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன்பிறகு விஜய் தேவர கொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா கிசுகிசுக்கப்பட்டு நிலையில் இருவரும் காதலை மறுத்துள்ளனர். மேலும் தற்போது ராஷ்மிகா கிரிக்கெட் வீரர் சுப்பன் கில்லை காதலிப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.