தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு, கஜகஸ்தான் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நிலா பாலு வெள்ளி பதக்கமும், குழு பிரிவில் தங்கப்பதக்கமும் வாங்கி பெருமை சேர்த்துள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த 66-வது தேசிய துப்பாக்கி சூடுதல் சாம்பியன்ஷிப் ஜூனியர் மகளிர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதனை அடுத்து தற்போது அவர் குழு பிரிவில் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
நிலாவின் அபார திறமை தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து பெருமை சேர்கிறது என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
