இப்போது மனிதர்களுக்கு இருப்பது போலவே, ஒரு கிளிக்கும் ஸ்மார்ட்போன் பழக்கம் (Phone Addiction) வந்துவிட்டது! சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகிறது. அதில், ஒரு கிளி தரையில் இருக்கும் மொபைல் போனைப் பார்த்துக்கொண்டே, போனை ஆப்பரேட் செய்கிறது. அந்தக் கிளி அறிவிப்புகள் வந்தால் ‘பேக்’ பட்டனை அழுத்துகிறது. பிறகு, யூடியூப் செயலியைத் திறந்து, தனக்குப் பிடித்தமான (மற்றொரு கிளியின்) வீடியோவைத் தேடுகிறது.
விளம்பரம் வந்தால் அதையும் ஸ்க்ரோல் செய்து விடுகிறது. எங்கே க்ளிக் செய்ய வேண்டும், எப்படி ஸ்க்ரோல் செய்ய வேண்டும் என்று போனின் அனைத்து விஷயங்களும் இந்தக் கிளிக்குத் தெரிந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நெட்டிசன்கள் இந்தக் கிளியைப் பார்த்து, “இது பெரிய ஸ்மார்ட் கிளி” என்று புகழ்ந்து வருகிறார்கள்.
