மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார் மாவட்டத்தில் நடந்த சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பான்புரா பகுதியில் உள்ள மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கார் அரசு கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன் இளைஞர்களுக்கான விழா நடைபெற்றது.
मध्य के मंदसौर में ABVP से जुड़े छात्रों ने जो किया, वह बेहद शर्मनाक है। उमेश जोशी, अजय गौड़, हिमांशु और एक अन्य ने शासकीय कॉलेज में युवा उत्सव के दौरान कपड़े चेंज करती हुई छात्राओं का मोबाइल से वीडियो बनाया। हरकत कॉलेज में लगे CCTV कैमरा में कैद हो गई। तीन आरोपी छात्रों को… pic.twitter.com/uhf6suOdIn
— Bhadohi Wallah (@Mithileshdhar) October 17, 2025
விழாவில் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதில் பங்கேற்ற சில மாணவிகள் உடை மாற்றும் பொருட்டு தனி அறைக்கு சென்றபோது, சில மாணவர்கள் அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டனர். அறைக்குள் மாணவிகள் உடை மாற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான்கு மாணவர்கள் ரகசியமாக அறை வெளியே நின்று மொபைல் போன் மூலம் உள்ளே நடப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அதிலும், ஒரு மாணவன் மற்றொருவரின் தோளில் ஏறி நின்று காட்சி தெளிவாகப் பதிவாகுமாறு பார்த்துக்கொண்டது சி.சி.டி.வி. காட்சிகளில் வெளிவந்துள்ளது. இந்த அருவருப்பான சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய உமேஷ் ஜோஷி, அஜய் கவுடு மற்றும் ஹிமான்சு பைராகி எனும் மூன்று மாணவர்களையும் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் செயலில் உள்ள உறுப்பினர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஏ.பி.வி.பி. அமைப்பின் நகரச் செயலாளர் பதவியில் இருந்த உமேஷ் ஜோஷி உடனடியாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். கைதானவர்களின் மொபைல் போன்கள் தற்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
