அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு முக்கியமான மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. இந்த மாட்டு தொழுவத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 18,000-க்கும் மேற்பட்ட பசுக்கள் சம்பவ இடத்திலேயே உடற்கருகி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவில் கடந்த 10 வருடங்களில் இது போன்று ஏற்பட்ட தீ விபத்துகளில் சிக்கி 65 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.