சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாடு ஐந்து முதல் பத்து மீட்டர் நகர்ந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். துருக்கி, சிரியா எல்லையில் சென்ற ஆறாம் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரெக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துருக்கியை தாக்கியதாக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அந்த நாடு அமர்ந்திருக்கும் டெக்டானிக் தகடுகளை ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்த்தி இருக்கலாம் என்றும் இத்தாலிய நில அதிர்வு நிபுணர் மற்றும் பேராசிரியர் கார்லோ டாக்லியோனி தெரிவித்துள்ளார்.