அணு ஆயுத ஏவுதளம் ஒன்று அமெரிக்காவின் மவுண்டானா மாகாணத்தில் உள்ளது. அதன் மேல் சீன உளவு பலூன் ஒன்று பரந்த நிலையில் அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலில் விழுந்த பாகங்களை அமெரிக்க கடற்படை சேகரித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அது உளவு பலூன் அல்ல என்றும் வானிலையை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட பலூன் வழிமாறி சென்று விட்டதாகவும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் அந்த பலூன் சீனா விமானப்படையால் இயக்கப்பட்டது என்றும் அது உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்பட்டது என அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில் சீனா பலூன் அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா, ஜப்பான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளையும் உளவு பார்த்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியானதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.