கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் அப்சல் (17), அஜ்மல் (16), நாசில் (15), அஜித் (17) ஆகிய 4 நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து குழித்துறையில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு பைக்கில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அந்த பைக்கை அப்சல் ஓட்டியுள்ளார். பைக் மார்த்தாண்டம் அருகே கல்லுதொட்டி பகுதி வழியாக சென்றபோது சாலையில் எதிரே வந்த அரசு பஸ் உடன் நேருக்கு நேர் மோதியதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டனர்.
அந்த பயங்கர விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அப்சல், அஜித் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர்.
மீதமுள்ள நாசில், அஜ்மல் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பம் குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
