சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயது மகள் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தாள். இதனையடுத்து திடீரென குளியலறையில் இருந்து சிறுமி அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் குளியலறையில் இருந்து தப்பி ஓடினான்.
பின்னர் சிறுமியிடம் விசாரித்த போது மாணவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.