சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தெற்கு போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்த ஜெகநாதன் என்பவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து அறிந்த ஜெகநாதனின் தந்தை சக்திவேல் அங்கு வந்து அபராதம் விதித்தது தொடர்பாக ராஜராஜனிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சக்திவேல் மீது வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.