நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருள் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, ஊராட்சி ஒன்றிய ஆணைய ராஜு பாஸ்கர், வட்டார கல்வி அலுவலர் ராஜரத்தினம், ஒன்றிய பொறியாளர் அருள் ராஜன் மணிமாறன், கருப்பங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கல்வித்துறை அதிகாரிகள் போன்றோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில் கருப்பம்புலம் தெற்கு காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.26 லட்சம் செலவில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்படும் ஆய்வகத்தையும் கலெக்டர் பார்வைக்கு ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அந்த பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் பணிகள்  குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.