
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தின் பாடலுக்கான நான் ரெடி லிரிக்ஸ் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது. இந்தப் பாடல் வெளியானதுமே அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். அதில் உள்ள வரிகள் போதை பழக்கத்தை ஊக்குவிக்கின்றன என்று பல்வேறு மட்டங்களில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று நான் ரெடி படத்தின் பாடல் வரிகள் நீக்கப்பட்டன. அதில் உள்ள சர்ச்சைக்குரிய வகையில் இடம் பெற்றுள்ள ”பத்தாது பாட்டில் நான் குடிக்க அண்டால கொண்டா சேயேஸ் அடிக்க பத்த வச்சு புகைய விட்டா பவரு கிக்கு உள்ளிட்ட சில வரிகளையும், சிகரெட் பிடிப்பது போன்று வரும் காட்சிகளையும் நீக்கி உள்ளது ஒன்றிய திரைப்பட சான்றிதழ் வாரியம்.
இதையடுத்து ராஜேஸ்வரி பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. @actorvijay,@Dir_Lokesh, @7screenstudio எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும்…. உண்மை பணத்தைவிட வலிமையானது என பதிவிட்டுள்ளார்.
நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு.
நீதி வென்றுவிட்டது.தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி.@actorvijay@Dir_Lokesh @7screenstudio
எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை… pic.twitter.com/aJWnPw38u3
— ராஜேஸ்வரி பிரியா (@Rajeswaripriya3) September 9, 2023