நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னைய கேட்பான்… நான் ஆட்சிக்கு வந்தேன்னா… கல்வி இலவசமாக்குவேன்,  மருத்துவத்தை இலவசமாக்குவேன், அதிமேதாவிகள் இருக்காங்க இல்ல… இந்த அரை மெண்டல்.அது ஏற்கனவே இலவசமாக தான் இருக்கு. இலவசமா இருக்கு…. எந்த அமைச்சர் புள்ளை அதுல படிக்குது ? எந்த சட்டமன்ற உறுப்பினர் மகன் அங்க படிக்கிறான் ? எந்த பாராளுமன்ற உறுப்பினர் மகன் அங்க படிக்கிறான் ? அரசு மருத்துவமனை இலவசமாக இருக்குது…

ஏன் செந்தில் பாலாஜிக்கு உடம்பு முடியலன்னு காவிரிக்கு தூக்கிட்டு போனே ? ஏன் ஐயா கருணாநிதிக்கு முடியலன்றதும் ராமச்சந்திரா கொண்டு போனீங்க ?  காவிரி கொண்டு போனீங்க ? ஏன் அம்மையார் ஜெயலலிதாவுக்கு முடியலன்னதும் அப்போலோ கொண்டு போனீங்க ? ஏன்னா… தரமா இல்ல. நாங்க சொல்லுவது அனைவருக்கும் சரியான… சமமான…. தரமாக கல்வி இலவசம்.

நாட்டின் முதல் குடிமகனுக்கு என்ன மருத்துவமோ,  அது கடை கோடி மகனுக்கும் மருத்துவம், அதுதான் மாறுதல். தேர்தல் வருது… ஒரு மாறுதல் வருதா ? ஒரு ஆறுதல் வருதா ? மக்களின் வாழ்க்கையில கொஞ்சம் தேறுதல்  வருதா ? வரல. இதை வர வைக்கணும்னா ஒரே வழி இருக்கு. என்ன வழி ?  விவசாயி-க்கு ஓட்டு போடணும். அதுலயும் என்னை என்ன பாடுபடுத்துவாங்கன்னு நினைக்கிறீங்க?  பெட்டில மூணாவது பெட்டில கொண்டு வச்சிருவாங்க. எந்த பெட்டில இருக்குன்னு தெரியாது ? சின்னத்தை கண்ணுல தெரிய விட மாட்டாங்க…

நான் எப்படி வாக்கு கேட்பேன் தெரியுமா ? அப்பா.. அம்மா… பெட்டிய பூரா தேடுமா ? எந்த சின்னம் சுத்தமா தெரியலையோ..  அதை அழுத்திவிடுமா, அதுதாம்மா நம்ம விவசாயி.நாங்க படுற பாடு உங்ககிட்ட மாட்டிகிட்டு….  ஐயோ ஏன் தான் இந்த இனத்துல பிறந்தோமோ… காக்காயா பிறந்தா கூட நாலு மரத்துல உக்காந்துட்டு…  நல்ல சுதந்திரமா கத்திட்டாவது செத்திருக்கலாம் என வேதனையோடு பேசினார்.