தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பயன் அடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ காப்பீட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் வெறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தற்போது வரையிலும் ஒவ்வொரு வாரமும் மாநிலத்தின் பல இடங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு புதிய பயனாளிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருத்துவத்துறையில் பொதுமக்களுக்கு அடுத்த சேவை வழங்கும் விதமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வழக்கத்தில் 100 கோடி செலவில் மருத்து ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதிய மருத்துவ ஆராய்ச்சி மையம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீட்டு பணிகள் நடைபெறுவதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.