நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி பூங்காவை 5 நாட்களில் நகராட்சி நிர்வாகம் இழுத்து பூட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பூங்காவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற மாதம் 28 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இன்று (பிப்,.3) செம்மொழி பூங்காவை பராமரிப்பது குறித்து ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் பூங்காவை பராமரிப்பது பற்றியும் பூங்காவிற்கு கட்டணம் விதிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.