தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் துணிவு படத்தை தொடர்ந்து ஏகே 62 படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏகே 62 படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கமிட்டான நிலையில் சில காரணங்களுக்காக அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பிறகு ஏகே 62 படத்தின் அப்டேட் வருவதற்கு தாமதமாகும் நிலையில் நாளை அதாவது நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏகே 62 படத்தின் அறிவிப்பு தல அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.