தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு தனது வாக்கினை செலுத்த இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் வந்துள்ளார். அப்போது பேசிய அவர், லியோ திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருத்திருக்கிறேன். நடிகர் விஜய் 20 வருடம் ஆகியும் மாறாமல் அதே போல் இருக்கிறார். விஜய் – லோகேஷ் சேர்ந்தாலே பக்கா ஆக்ஷன் படமாக தான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.