நடிகை வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் நேற்று காலமானார். வனிதா விஜயகுமார் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இவரது மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் வனிதா. ‘பிறருக்கு உதவுபவர்களுக்கு கடவுள் உதவுவார் என அம்மா சொல்லி கொடுத்தார். இது நாம் அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். இத்தனை நாள் வாழ்க்கையில் கொடிய நோய்களுடன் போராடிய உங்களுக்கு இப்போது நிம்மதி கிடைத்திருக்கும். எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.