தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தளபதி 68 திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் நடிகர் ஜீவாவிடம் ரசிகர் ஒருவர் தளபதி 68  படத்தின் அப்டேட் குடுங்க அண்ணா என கேட்டுள்ளார். அதற்கு நடிகர் ஜீவா விரைவில் தளபதி 68 படத்தின் அப்டேட் வரும் என்று கூறியுள்ளார். மேலும் இது தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.