பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவருக்கு தற்போது 57 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான் தன்னுடைய திருமணம் குறித்து பேசி உள்ளார். அதாவது நடிகர் சல்மான் கானுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். திருமணம் செய்து கொள்ளாமல் பாலிவுட் திரையுலகில் பல நடிகர் மற்றும் நடிகைகள் குழந்தைக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கிறார்கள். இதேபோன்று குழந்தைக்கு தந்தையாக வேண்டும் என சல்மான் கான் விரும்புகிறார்.

ஆனால் தற்போது சட்டங்கள் மாறிவிட்டதால் அதற்கு என்ன வழி என்பது குறித்து யோசித்து வருகிறார்களாம். அதன்பிறகு கண்டிப்பாக நான் ஒரு குழந்தைக்கு தந்தையாவேன் எனவும் ஆனால் என்னுடைய குழந்தையின் தாய் என்னுடைய மனைவியாக தான் இருப்பார் எனவும் சல்மான் கான் கூறியுள்ளார். இதன் மூலம் நடிகர் சல்மான் கான் திருமணத்திற்கு தயாராகி வருவது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் நடிகர் சல்மான் கான் நடிகை பூஜா ஹெக்டேவை காதலித்து வருவதாக சமீப காலமாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.