தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகி எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் வெள்ளி திரையில் தன் திறமையின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்திலும், அயலான்‌ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறிது காலத்திற்கு ட்விட்டரில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடைய படம் குறித்த அப்டேட்டுகளை படக்குழு அறிவிப்பார்கள் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.