இயக்குனரான செல்வராகவன் தற்போது பகாசூரன் திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்த பகாசூரன் திரைப்படம் சென்ற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரபலங்கள் பலரும் செல்வராகவனை பாராட்டி வருகின்றார்கள்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி கூறியதாவது, செல்வராகவன் முழுவதுமாக கதாநாயகனாக நடிப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமே தெரிந்த சிறந்த நடிகரை இந்த உலகமும் பார்க்கிறது வாழ்த்துக்கள் என கூறி இருக்கின்றார்.
இதுபோல எஸ் ஜே சூர்யா கூறியுள்ளதாவது, இயக்குனர் செல்வராகவன் சார் பகாசூரன் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். பாராட்டுகளை பெற்று வரும் பட குழுவிற்கு வாழ்த்துக்கள்.
இதுபோல பிரபல ஹிந்தி இயக்குனரான அனுராக் காஷ்யப் பகாசூரன் திரைப்படத்திற்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதாக தெரிகின்றது. எனது நண்பர்களான நட்டி நடராஜன் மற்றும் செல்வராகவனுக்கு வாழ்த்துக்கள் என கூறி இருக்கின்றார். இதுபோல திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துளர்கள்.