ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் சென்ற 2019 வருடம் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் நூறு நாட்களை கடந்த நிலையில் சமீபத்தில் இதற்கான வெற்றி விழா நடைபெற்றது. இதில் பட குழுவினர் அனைவரும் பங்கேற்றார்கள்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் மேகிங் வீடியோ வெளியாகி உள்ளது. பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என  வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.