நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் திருச்சியில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். இது நம்பும்படி இருக்கிறதா? அப்படி நடந்ததற்கான தெரிகிறதா? போற போக்கில் பொய் சொல்லிவிட்டு போகிறார்கள். உண்மையை மட்டும் பேசுங்கள். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளிநாடு செல்கிறார்.

இதனால் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு இடைக்கால முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும். இது அவருக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாக இருக்கும். எனக்கு தெரிந்து இப்போது இருக்கிற தலைவர்களில் அதி புத்திசாலி எடப்பாடி பழனிச்சாமி தான். அவரை தற்குறி என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கக் கூடாது. தனிநபர் விமர்சனம் அநாகரிக பேச்சுகளை எல்லாரும் சேர்ந்து குறைக்க வேண்டும் என என சீமான் கூறியுள்ளார்.