திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  DMK சட்டமன்ற உறுப்பினர் எழிலன், சாமானியர்களை மருத்துவராகிய அழகு பார்த்த சிஸ்டம், நம்மளோட சிஸ்டம். நீட்  என்ன பண்ணுதுன்னா ..?  நீட் ஒரு பில்டர் எக்ஸாம். எங்க பில்டர் வைக்கிறது என்றால் ? சாமானியர்களை மருத்துவர் ஆக விடாமல் தடை பண்ணுது. அதனால்  தான்  மாபெரும் போராட்டம் தமிழ்நாட்டில் வெடிக்குது. பிற மாநிலத்தில்  எந்த சாமானியரும் மருத்துவராகவில்லை.

ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் போங்க… எம்எம்சி போங்க…. கடலூர் மெடிக்கல் காலேஜ் போங்க…. அங்க பிற்படுத்தப்பட்டோர்…   பட்டியலின மக்கள்…. மலைவாழ் மக்கள் எல்லோருமே டாக்டர்ஸா ஒரு கிளாஸ் ரூம்ல உக்கார்ந்து இருப்பாங்க.  இதே இந்திய மருத்தவ கல்லூரி நிறுவனம்   டெல்லிக்கு போய் பாருங்க….. இல்ல  IIT , IMC  போங்க. உள்ளே என்ட்ரி ஆனீங்க அப்படின்னா… அங்க  இருக்கக்கூடிய பட்டதாரிகளின் 90%  பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக தான் இருப்பாங்க….

10%க்கு உள்ளே தான் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்ககள், SC/ST மக்கள்  இருப்பாங்க. தமிழ்நாட்டோட மாடல்… திராவிட மாடல்….  தந்தை பெரியாருடைய மாடல்… கலைஞருடைய மாடல் என்னன்னா திராவிடம் மாடல் முதல்வரின் மாடல் என்னவென்றால், ஒருங்கிணைந்த வளர்ச்சி… என்னுடைய வகுப்பறையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் மருத்துவராக்கி அழகு பார்ப்பது…. இவங்க தான் மண்ணின் மைந்தர்கள்….  ஆல் இந்திய மெடிக்கல் டெல்லியில் இருக்கு.

யூனியன் கவர்மெண்ட் 500 கோடி வருஷத்துக்கு கொடுக்குறாங்க. 56% இந்திய மெடிக்கல் சயின்ஸ் பொருட்கள் இந்தியாவிலே கிடையாது… UK, US சிஸ்டம்ல இருக்காங்க. ஆனால் நம்முடைய அரசு நிறுவனத்தில்….  அரசு மருவ கல்லூரியில் சேருங்க… UG  முடித்தால் 50% கோட்டா இருக்கு… அதுல சேருங்க… மருத்தவ கல்லூரியில் சேவை செய்யுங்க… அரசு நிறுவனத்தில் சேவை செய்யுங்க… சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிடுவீங்க..  அதான் இந்த சிஸ்டம்.

இந்த டெவலப்மெண்ட் உருவாக்கியது ஒரு நாள்… ரெண்டு நாள் இல்ல… ஆரம்பத்துல மதிவதின்னு சொன்ன போல தந்தை பெரியார் நடத்தின சமூகநீதி போராட்டம் தொடர்ந்து…. மருத்துவ சேவைகளிலும்,  மருத்துவ படிப்பிலும்….  முத்தமிழ் அறிஞர் கலைஞர்  ரிசர்வேஷன் BC க்கு 30% அதிகரித்து….  MBC-க்கு  25%  உள் ஒதுக்கீடு கொடுத்து…. SC-க்கு 16இல் இருந்து 18% அதிகரித்து…. பட்டியலின மக்களுக்கு 1%  கொடுத்து…. இஸ்லாமியர்களுக்கு பிரசவம் பாக்குறதுக்கு….. இஸ்லாமியர் டாக்டர் ஆக்குவதற்கு 3.5% கொடுத்து….

காலகாலமாக மலம் அள்ளும்  தொழிலாளி  சமூகத்தை மீட்டெடுத்து….. அருந்ததியர்களுக்கு  3% இடஒதுக்கீடு கொடுத்து…. எல்லாரையும் படிக்க வைத்து, டாக்டர் ஆக்கி…. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கட்டி….19 டிபார்ட்மெண்ட் ஓபன் பண்ணி….  19% ரிசர்வேஷன் வழியாக மாணவர்கள் உள்ள சேர்த்து… . கிராமப்புற ரூரல் கோட்டா கொடுத்து…..   எப்படி எப்படி எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் போய்க்கொண்டு சேர்க்கணுமோ….. அப்படி சேர்த்து உருவாக்கிய மருத்துவ கட்டமைப்பு தான் நம்முடையது. இது 1 நாள்… 2 நாள்… 3 நாளில் நடந்த விஷயம் கிடைத்து…

இது  உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாது. ஒன்றிய ஆட்சி முறையில் உட்கார்ந்திருக்கிற ஆட்சியாளர்கள் தெரியாது. இந்த சிஸ்டத்தை பத்தி அங்குள்ள பாலிசி மேக்கர்களுக் தெரியாது . அவுங்களோட  approvech அப்பர்  அப்ரோச். நம்மளுடைய அப்ரோச்….  திரவிடின் மாடல் அப்ரோச் டவுன் அப்ரோச்…. கீழிருந்து பார்க்கும் பார்வை.   அவ்வளவு டேட்டா கொடுக்க முடியும் என திராவிட மாடல் அரசை தூக்கி பிடித்தார்.