அறிவியல் சார்ந்த வினாடி வினா போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அதிகம் நடத்தப்படுவது வழக்கம். அதில் இருக்கும் கேள்விகள் நமக்கு ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் அதில் இருக்கும் சுவாரஸ்யமும் அதிகம். அதன்படி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடியது முதல் அனைத்திலும் நிறைந்துள்ள அறிவியல் குறித்த பதிவை இதில் பார்க்கலாம்.

  1. காந்தத் தன்மையற்ற பொருள் – கண்ணாடி
  2. இரும்பின் தாது – மாக்னடைட்
  3. பதங்கமாகும் பொருள் – கற்பூரம்
  4. அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் – சீசியம்
  5. அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது – கிரிக்கெட் மட்டை
  6. நீரில் கரையாத பொருள் – கந்தகம்
  7. நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு – கார்பன் -டை -ஆக்சைடு
  8. நீரில் கரையாத வாயு எது – நைட்ரஜன்
  9. பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி – உருகுதல்
  10. நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
  11. மின்காந்தம் பயன்படும் கருவி – அழைப்பு மணி
  12. வெப்ப கடத்தாப் பொருள் – மரம்
  13. திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்
  14. ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு
  15. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்
  16. ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்
  17. கலவைப் பொருள் என்பது – பால்
  18. கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை – கையால் தெரிந்து எடுத்தல்
  19. கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் – சோடியம் கார்பனேட்
  20. தீயின் எதிரி என அழைக்கப்படுவது – கார்பன் டை ஆக்சைடு
  21. போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் – பாரிஸ் சாந்து
  22. அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் – வினிகர்
  23. கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் – அசிட்டோன்
  24. 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் – பார்மலின்
  25. 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் – கண்ணாடி
  26. 100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் – தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
  27. தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் – கார்டியாக்
  28. தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் – லென்டிசெல்
  29. இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது – காப்பு செல்கள்
  30. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு – ஆக்ஸிஜன்
  31. உழவனின் நண்பன் – மண்புழு
  32. சிதைப்பவை – காளான்
  33. உயிர்க்காரணி – பாக்டீரியா