பொது அறிவு வினா விடைகளை படிப்பதால் அவை நம் எதிர்காலத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் நம்முடைய மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்க பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக அறிவியல் சார்ந்த வினா விடை என்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அதன்படி தற்போது அறிவியல் சார்ந்த வினா விடை குறித்து எதிர்பார்க்கலாம்.

1. பிரகாசமான ஒளியுடன் எரியும் தனிமம் எது?

விடை: மக்னீசியம்

2. ஆரஞ்சுப்பழத்தில் அதிக அளவு உள்ள வைட்டமின் எது?

விடை: வைட்டமின் சி

3. பயோரியா வியாதியால் உடலின் எந்த பகுதி பாதிக்கப்படும்.

விடை: பற்கள்

4. நைட்ரஜன் வாயுவை கண்டுப்பிடித்தவர் யார்?

விடை: டேனியல் ரூதர்போர்டு

5. போலியோ சொட்டு மருந்தினை கண்டுப்பிடித்த விஞ்ஞானி யார்?

விடை: ஜோனல் சால்க்

6. பென்சிலின் என்பது எதனை குறிப்பிடுகிறது?

விடை: உயிர் எதிரி

7. திட கார்பன் டை ஆக்சைடு என்பது என்ன?

விடை: உலர் பனிக்கட்டி

9. பாலில் இருக்கும் கலப்படத்தை கண்டறிய உதவும் கருவி எது?

விடை: பால்மானி

9. x கதிர்களை பயன்படுத்தி எந்த நோயை குணப்படுத்த முடியும்

விடை: புற்றுநோய்

10. இந்திய தொல் தாவரவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

விடை: பீர்பால் சஹானி