சர் சி.வி ராமன் ‘ராமன் விளைவு கோட்பாட்டை’ உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அந்த நாளை நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1986-ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு அந்த தினத்தை அறிவித்தது. அதே நாளில் அறிவியலை பரப்புவதற்காக நாட்டில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்ட கருப்பொருட்களின் தொகுப்பு

  • கடந்த 1999-ஆம் ஆண்டு மாறும் பூமி என்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது.
  • 2000-ஆம் ஆண்டு அடிப்படை அறிவியலில் ஆர்வத்தை மீண்டும் உருவாக்குதல் என்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது.
  • கடந்த 2001-ஆம் ஆண்டு அறிவியல் கல்விக்கான தகவல் தொழில்நுட்பம் என்பதே கருப்பொருள்.
  • 2002-ஆம் ஆண்டு கழிவிலிருந்து செல்வம் என்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது.
  • 2003-ஆம் ஆண்டு டிஎன்ஏ 50 ஆண்டுகள்& ஆய்வுக்கூட கருத்தரிப்பு 25 ஆண்டுகள் என்பதே கருப்பொருள்.
  • 2004-ஆம் ஆண்டு சமூகத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஊக்குவித்தல் கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது.
  • 2005-ஆம் ஆண்டு கருப்பொருள் இயற்பியலை கொண்டாடுதல்.
  • 2006-ஆம் ஆண்டு நமது எதிர்காலத்திற்கான இயற்கையை வளர்ப்பது என்ற கருப்பொருள் கடைபிடிக்கப்பட்டது.
  • 2007-ஆம் ஆண்டு கருப்பொருள் ஒரு சொட்டுக்கு அதிக பயிர் என்பதே ஆகும்.
  • 2008-ஆம் ஆண்டு பூமியை புரிந்து கொள்வது கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது.
  • 2009-ஆம் ஆண்டு அறிவியலின் எல்லைகளை விரிவுபடுத்துதல்.
  • 2010-ஆம் ஆண்டு பாலின சமத்துவம் நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பதே கருப்பொருள்.
  • 2011-ஆம் ஆண்டு அன்றாட வாழ்க்கையில் வேதியியல் என்பது கருப்பொருளாக பின்பற்றப்பட்டது.
  • 2012-ஆம் ஆண்டு சுத்தமான ஆற்றல் விருப்பங்கள் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு.
  • 2013-ஆம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு என்பது கருப்பொருளாக அனுசரிக்கப்பட்டது.
  • 2014-ஆம் ஆண்டு கருப்பொருள் அறிவியல் மனநிலையை வளர்ப்பது.
  • 2015-ஆம் ஆண்டு தேசத்தை கட்டி எழுப்புவதற்கான அறிவியல் என்ற கருப்பொருள் கடைபிடிக்கப்பட்டது.
  • 2016-ஆம் ஆண்டின் கருப்பொருள் தேசத்தின் வளர்ச்சிக்கான அறிவியல் என்பது ஆகும்.
  • 2017-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்.
  • 2018-ஆம் ஆண்டு நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது கருப்பொருளாக பின்பற்றப்பட்டது.
  • 2019-ஆம் ஆண்டின் கருப்பொருள் மக்களுக்கான அறிவியல், அறிவியலுக்காக மக்கள் என்பது ஆகும்.
  • 2020-ஆம் ஆண்டு அறிவியலில் பெண்கள் என்பதே கருப்பொருள்.
  • 2021-ஆம் ஆண்டு அறிவியல் தொழில்நுட்பத் தாக்கம் கல்வி திறன்கள் மற்றும் வேலை என்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்பட்டது.
  • 2022-ஆம் ஆண்டு நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்பது கருப்பொருளாக பின்பற்றப்பட்டது.
  • 2023-ஆம் ஆண்டின் கருப்பொருள் உலகளாவிய நல்வாழ்வுக்கான உலகளாவிய அறிவியல் என்பது ஆகும்.