தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சர் சி வி ராமன் அவர்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 1988-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதி திருச்சி அருகே உள்ள திருவானைக்காலில் பிறந்தவர் சர் சி.வி ராமன். இளநிலை முதல்நிலை பட்டப்படிப்பை முடித்த ராமன் அவர்கள் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். நீர், காற்று உள்ளிட்ட ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது சிதறல் அடைந்து அதன் அலை நீளமாக மாறுகிறது.

அதில் அதிகமாக சிதறும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது என்பதை சர் சி.வி ராமன் அவர்கள் தான் கண்டறிந்தார். இதற்காக 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அவருக்கு கொடுக்கப்பட்டது. உலகம் புகழும் மனதில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட சிறந்த இயற்பியல் மேதை சர் சி.வி ராமன் தான் நோபல் பரிசு பெறுவதற்கு காரணமாக இருந்த ஆராய்ச்சியான ராமன் விளைவு கோட்பாட்டை வெளியிட்ட தினம் தான் பிப்ரவரி 28. இந்த தினத்தை தான் தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம். அறிவியலை பரப்புவதற்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தனிநபர்கள் போன்றவர்களுக்கு தேசிய விருது இந்த தினத்தில் வழங்கப்படுகிறது.