இந்தியாவில் அறிவியல் துறையில் உலக அளவில் சாதனை படைத்தவர்களில் முக்கியமானவர் சர் சி.வி ராமன். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்க்கையில் பயன்பாட்டிற்கு உதவும் விதமாக இருக்கும். ஆனால் இவருடைய கண்டுபிடிப்பு அறிவியலின் பல துறைகளுக்கும் உதவும் விதமாக இருக்கிறது. இவருடைய கண்டுபிடிப்பானது பல ஆராய்ச்சிகளுக்கு இன்றும் உதவி வருகிறது. ஒரு ஒளியானது  ஒரு பொருளின் வழியே புகுந்து செல்லும் பொழுது சிதறி அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் அறிவியல் உலகிற்கு ஆய்வு செய்ய நல்ல வழிமுறை கிடைத்தது. அணுக்கழிவுகளை தொலைவில் இருந்தே ஆய்வு செய்தல், லேசர் மருத்துவமனை உள்ளிட்ட பல துறைகளில் ராமன் விளைவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஒலி மாற்ற விளைவை பிப்ரவரி 28 1928 ஆம் வருடம் கண்டுபிடித்தார்கள். இதற்காக இவருக்கு 1930 ஆம் வருடம் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆசியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியரும் தமிழரும் ர்  சிவி ராமன் தான். அவருடைய கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல்  தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.