திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அறிவியல் அறிஞர் சர்.சந்திரசேகர் வெங்கட்ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந்தேதி பிறந்தார். அவருடைய தந்தை சந்திரசேகர் அய்யர். பின்னர் 1904-ம் ஆண்டு சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் அவர் சேர்ந்தார். அங்கு பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். எம்.ஏ., பட்டப்படிப்பையும் அதே கல்லூரியிதொடர்ந்தார். 1907-ம் ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நிதித்துறை தேர்வு எழுதி முதலிடம் பிடித்தார். ஜூன் மாதம் கொல்கத்தாவில் உள்ள கணக்குத்துறையில் தலைமை அலுவலராக பணியில் சேர்ந்தார்.

இந்தியாவில் அறிவியல் துறையில் உலக அளவில் சாதனை படைத்தவர்கள் முக்கியமானவர் சர் சி வி ராமன் அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்க்கையில் பயன்பாட்டிற்கு உதவும் விதமாக இருக்கும் ஆனால் இவருடைய கண்டுபிடிப்பு அறிவியலின் பல துறைகளுக்கும் உதவும் விதமாக இருக்கிறது பல ஆராய்ச்சிகளின் இன்று உதவி வருகிறது ஒரு ஒளியானது ஒரு ஊடகத்தின் ஒரு பொருளின் வலியை புகுந்து செல்லும் பொழுது சிதறி அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது இந்த கண்டுபிடிப்பின் மூலம் அறிவியல் உலகிற்கு ஆய்வு செய்ய நல்ல வழிமுறை கிடைத்தது