மருத்துவம், அறிவியல், இலக்கியம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதி போன்றவைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. பரிசு பணமும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது . பரிசு பெறும் ஒவ்வொரு நபருக்கும், ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவார்கள். நோபல் பரிசு வென்றவர்கள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டவர்.

அந்த வகையில் முதன் முதலாக 1913 ஆம் வருடம் இந்தியாவில் மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியர் ஒருவருக்கு கிடைத்த முதல் நோபல் பரிசு இதுதான். அதன் பிறகு 1930 வருடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி வி ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. ஸ்ரீ சந்திரசேகர வெங்கட்ராமன் தன்னுடைய சிறப்பான பணிக்காக இந்தியாவில் இருந்து இரண்டாவது நோபல் பரிசு பெற்றவர் என்று அறிவிக்கப்பட்டார். இவர் பாரத ரத்னா விருது பெற்றவரும் கூட.