சுதந்திரத்துக்கு முன்னதாக உணவு தேடி அலைந்த மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்ட பிறகு அவனுடைய தேவை அதிகரிக்க அதிகரிக்க வேளாண்மையை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்தான். தொடக்க காலத்தில் ஆற்று ஓரங்களில் நீர்வளம் அமைந்த பகுதிகளில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது. பிற்பகுதியில் நிலங்களை உழுவதற்கும், அறுவடை செய்வதற்கும், போர் அடிப்பதற்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவின் விடுதலைக்கு பிறகு வேளாண்மை தேக்க நிலையில் இருந்தது. விவசாய புரட்சிக்கு அடித்தளம் இட்டவர் நேரு. முதலாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று உணவு பற்றாக்குறையை போக்குதல். நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசுமை புரட்சி திட்டம் 1967-68ல் அறிமுகம் செய்யப்பட்டது.

நாட்டினுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகள் மிக முக்கியமான பங்காற்று வருகிறது.  இவை நாட்டினுடைய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு வாழ்வாதாரமாக இருப்பதோடு மட்டுமின்றி நம்முடைய பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை முறையினை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் விளங்குகிறது. மேலும் கால்நடை, தோட்டக்கலை, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காடு வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. நாட்டின் வருமானத்தில் கால் பங்கு விவசாயம் மற்றும் விவசாய சார்ந்த துறைகளில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

நாட்டு ஏற்றுமதியில் விவசாயத்தில் இருந்து மட்டுமே 16 சதவீதம் கிடைக்கிறது. அது மட்டுமே 50% வேலையாட்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் தான் ஈடுபட்டு வருகிறார்கள். 2018- 19 ஆம் வருட பொருளாதார கணக்கெடுப்பின்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆனது 7-7.5 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியா தான் அதிக அளவில் பாசன பயிர்களை உற்பத்தி மற்றும் நேர் பதிவு செய்து வருகிறது.

பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு உலக அளவில் 19 முதல் 165 மில்லியன் டன் ஆகும். இந்தியாவில் இன்னும் விவசாயம் இடர்பாடு உள்ள தொழிலாக தான் இருக்கிறது. ஆண்டு வருமானம் காலநிலை பொருத்து உள்ளது உற்பத்தி செலவு அதிகரிப்பதாலும் லாபம் விவசாயத்தை குறைவதால் இளைஞர்களின் பங்களிப்பு விவசாயிகள் குறைந்து வருவதற்கும் இது ஒரு காரணம்.