இந்தியா விண்வெளி துறையில் உலகமே வியக்கும் விதத்தில் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்திய விண்வெளி துறையின் மைல்கல்லாக கருதப்படும் சாதனைகளில் ஒரு சிலவற்றை பார்க்கலாம்.

ஆர்யபட்டா: இந்த முதல் செயற்கைக்கோள் இந்தியாவின் தலைசிறந்த வானியல் அறிஞரான ஆரியபட்டாவின் பெயரில் 1975 ஏப்ரல் 19 ஏவப்பட்டது. 5 கோடி செலவில் இந்தியாவில் முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டது ஆரியபட்டா. பூமியிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் உயரத்தில் நாள் ஒன்றுக்கு 15 முறை தன்னுடைய ஆயுட்காலமான ஆறு மாதம் சுற்றி வந்தது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஏவுகலம் அப்போது இந்தியாவிலும் இல்லை என்பதால் அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் காஸ்மோஸ் மூன்று எம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.விண்வெளி ஆராய்ச்சியை பொருத்தவரை ஏவுகலன்களுக்கான செலவு மிகப் பெரியது.

இன்சாட்: இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்று அழைக்கப்படும் இது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டு தகவல் தொடர்பு அமைப்பு என்ற பெருமைக்கு உரியது. 1983 இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆனது தொலைதொடர்புத் துறை, இந்திய வானிலை ஆய்வு துறை, அகில இந்திய வானொலி தூர்தர்ஷன் போன்றவற்றின் கூட்டு முயற்சியால் உருவானது . இந்த தொகுதியில் மொத்தம் 21 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட நிலையில் அதில் 11 இயக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

PSLV: இந்தியாவின் மிக முக்கிய செயற்கைக்கோள்களை விண்ணிலேயே செலுத்தி இந்தியாவின் விண்வெளி சாதனைகள் பலவற்றுக்கு காரணமாக இருக்கிறது. 1993 முதலிலே பிஎஸ்எல்வி திட்டம் தொடங்கினாலும் அதன் வெற்றிகரமான பயணம் அது 1994 முதல் தொடங்கியது. சந்திராயன் 1 நிலவுக்கு செயற்கைகோளை அனுப்பி ஆய்வு செய்வது என்ற எண்ணம் 1999 ஆம் வருடம் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. இதற்காக ஒரு திட்ட குழுவானது 2000 ஆம் வருடத்தில் அமைக்கப்பட்டது. 2003 ஆம் வருடம் புகழ்பெற்ற பல்வேறு துறை அறிவியல் விஞ்ஞானிகள் கூடி நிலவுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்பும் திட்டம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தார்கள்.

சந்திராயன்-1: இதனைத் தொடர்ந்து இந்திய அரசின் ஒப்புதல் அளிக்க சந்திராயன் 1 திட்டம் தொடங்கியது. 386 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு மயில்சாமி அண்ணாதுரை தலைவராக இருந்தார். PSLV  எக்ஸ்எல் ராக்கெட் மூலமாக 2008 அக்டோபர் 22ஆம் தேதியானது விண்ணில் ஏவப்பட்டது. இது நவம்பர் எட்டாம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயனிலிருந்து பிரிந்த இந்த கலன் 2008 நவம்பர் 14ஆம் தேதி நிலவின் இறங்கி இந்திய கொடியை  நட்டியதன்  மூலமாக நிலவில் ஏதாவது ஒரு பொருளை வைத்த நான்காவது நாடு என்ற பெருமையை பெற்றது..