தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கோடை வெயிலின்  தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளை சீக்கிரம் திறந்தால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கும் என்பதால் தாமதமாக திறக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். வெப்பம் அதிகமாக இருக்கும் போது அரசு பொறுப்பில்லாமல் பள்ளிகளை திறந்தால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்காக ஜூன் 1-ம் தேதி பள்ளிகளை திறப்பது சரி கிடையாது. மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 10 நாட்கள் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என சீமான் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.