இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, குத்தாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போதும் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் சில மாணவிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அதில் 2 மாணவிகள் பள்ளி சீருடையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு புகைப்பிடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளது. பள்ளி சீருடையில் மாணவிகள் புகை பிடிக்கும் காட்சி நெஞ்சை பதப்பதைக்க வைத்துள்ளது.