புது டெல்லி குருகிராம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்கு ஈமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து சைபர் கிரைம் தலையிட்டு விசாரணை நடத்தியதில் 12 வயது சிறுவன் தான் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது என்று தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுவனிடம் விசாரித்தபோது நேரடியாக பள்ளிக்கு சென்று படிக்க வேண்டாம் என்று வகுப்புகளை ஆன்லைன் வகுப்புகளாக மாற்ற வேண்டும் என்று இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் எதிர்வினைகளை பற்றி சிந்திக்காமல் தவறிழைத்து விட்டதாக சிறுவன் கூறியுள்ளார். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.