செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், IAS ராதாகிருஷ்ணனை பொறுத்த வரையில பாத்தீங்கன்னா… ஒரு ஜென்டில்மேன் அவரு. ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி. ஒரு கவுன்சிலர் உடைய கைத்தடிகள் போய்  எவ்வளவு அலம்பல் பண்ணுச்சு… ஊடகங்களில் எல்லாம் வந்து இருக்கு. அவரும் பெருந்தன்மையாக சரி,  நீங்களும் மாமுல் வேணும்னா…  என்கிட்ட வந்து வாங்கிக்கோங்கன்னு சொல்லி, 2000 ரூபாய் ஒரு கடைக்கு நான் தரேன்னு சொல்லிட்டு பெருந்தன்மையா போனாரு.

அப்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு மதிப்பு இல்ல… காவல்துறைக்கும் மதிப்பில்லை….  யாருக்குமே மதிப்பில்லாத ஒரு அரசு தான். காவல்துறையே அடி வாங்குகிற அளவுக்கு காவல்துறை நிலைமை இன்னைக்கு ஆகிடுச்சு. இன்றைக்கு நாடு வெட்கி தலைகுனியக்கூடிய ஒரு செயலாக இருக்கு பூந்தமல்லியில் கஞ்சா விற்ற  பசங்க காவலரை விரட்டிட்டு ஓடுறான். காவல்துறை கஞ்சா விக்கிற பசங்கள விரட்டினது போய்,  கஞ்சா விக்கிற பசங்க காவல்துறையை விரட்டுது.

வடசென்னைல ஒரு எஸ்.ஐ கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் வச்சி இருக்காங்க. இந்த மாதிரி  ஒன்னு ரெண்டு சம்பவம் இல்ல.தமிழ்நாடு முழுவதும் நம்ம கிட்ட மிடுக்கா இருந்த காவல்துறை,  இன்றைக்கு வெட்கி தலை குனிந்து…  ஏன்டா காக்கி சட்டை போட்டோம்…  இந்த விடியாத அரசில்  என்ற  நிலைமையில் வேதனைக்கு தள்ளப்பட்டு…  இன்றைக்கு அடிவாங்குற காவல்துறையாக மாறிட்டு என தெரிவித்தார்.