வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற புனேவைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரிடம் பல்வேறு ஏமாற்று உத்திகளைக் கையாண்டு சைபர் மோசடி செய்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

 மேட்ரிமோனியல் இணையதளம்: பாதிக்கப்பட்டவர் பிரபலமான மேட்ரிமோனியல் இணையதளத்தில் தனது விவரங்களை  பதிவுசெய்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் சொகுசு  கப்பலில் வேலை செய்வதாகக் கூறும் ‘தாமஸ் மேத்யூ’ என்ற நபரின் சுயவிவரத்தைக் கண்டார். கப்பலின் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையைப் பெற்ற அவர், இந்தியாவுக்கு வந்த பிறகு அவளை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

 ஏமாற்றும் கதை: தான் பணிபுரியும் கப்பலை கடற்கொள்ளையர்கள் தாக்க வாய்ப்பிருப்பதாகவும் அதனால் அவர் வைத்திருந்த $129,000 கொரியர் மூலம் அப்பெண்ணுக்கு  அனுப்ப விரும்பினார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டு முகவரியை பகிர்ந்துள்ளார்.

 பணத்திற்கான கோரிக்கை: இந்திய வருகையை எளிதாக்க, ‘தாமஸ்’ பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ‘விசா கட்டணமாக’ ரூ. 24,735 வழங்குமாறு கேட்டுக் கொண்டார், அதை அவர் ஆன்லைனில் மாற்றினார்.

ஆள்மாறாட்டம்: ஜூன் 12 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘ஜெசிகா’ என்று கூறிக்கொள்ளும் நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி என்று அடையாளம் காட்டி கொண்டார். சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட பணம் அடங்கிய கூரியர் தங்களுக்கு கிடைத்ததாக ‘ஜெசிகா’ கூறியதுடன், பேக்கேஜைப் பெறுவதற்கு ‘பாதுகாப்புக் கட்டணமாக’ ரூ. 16,490 மாற்றுமாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கோரப்பட்டது.

அதிகரித்து வந்த  கோரிக்கைகள்: ‘ஜெசிகா’ தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து, 1.8 லட்சத்தை திரும்பப்பெற வைப்புத் தொகையாக  98,000 ரூபாய் ‘அபராதமாகவும்’ கேட்கப்பட  ‘தாமஸ்’ பாதிக்கப்பட்டவருக்கு இந்தியா வந்த பிறகு பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தார்.

 ஏமாற்றும் வங்கிக் கணக்கு: பாதிக்கப்பட்டவர் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ‘தாமஸை’ தொடர்பு கொண்டார், இந்நிலையில் அவர் “புளூ நைல் நேஷனல் பேங்க்” என்ற கற்பனையான வங்கியில் கணக்கிற்கான பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை அவருக்கு வழங்கினார். இந்தக் கணக்கிலிருந்து $10,000 பணப் பரிமாற்றம் செய்துகொள்ளுமாறு கூறினார். இது தாமஸ் மீது பெண்ணுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது.  ஆனால் பரிவர்த்தனை தோல்வியடைய  ‘தாமஸ்’ தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளதால், தனக்கு தற்போதைக்கு பணம் தேவைப்படுவதாக  அதிக பணம் கேட்க,  அதையும்  அவர் மாற்றியுள்ளார்.

போலீஸ்  கைது மற்றும் ஜாமீன்: டெல்லியில் ‘தாமஸ்’ கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘ஜெசிகா’விடம் இருந்து அழைப்புகள் வந்தன. அவளிடம் போலி ஜாமீன் உத்தரவு அனுப்பப்பட்டு, சட்டப் பணிக்காக கூடுதல் பணம் கேட்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, மேலும் பணம் அனுப்ப பாதிக்கப்பட்ட பெண் மறுத்துள்ளார்.

நிதி இழப்பு: இந்நிலையில் ஜூன் 9 மற்றும் ஜூலை 4 க்கு இடையில், பாதிக்கப்பட்டவர் பல்வேறு வங்கிக் கணக்குகளில் மோசடி செய்பவர்கள் கோரியபடி பல பரிவர்த்தனைகளைச் செய்தார், இதன் விளைவாக மொத்தம் ரூ 9.93 லட்சம் இழப்பு அவருக்கு ஏற்பட்டது.

உணர்தல் மற்றும் புகார்: தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண் புனேவில் உள்ள சைபர் போலீசில் புகார் அளித்தார், இது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மோசடி செய்பவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய வழிவகுத்ததுடன், பணத்தை மீட்பதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.