இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்தது. அந்த வரிசையில் வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. தற்போது வெளி மாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை நூறு ரூபாயை தொட்டுள்ளது. அன்றாட சமையலில் முக்கிய இடத்தை பிடித்த வெங்காயத்தின் விலை திடீரென்று உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக வெங்காயத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து ரேஷன் கடைகளில் வெங்காயம் 25 ரூபாய்க்கு வாங்கி வருகிறார்கள்.