ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது, கிளாசிக், ஸ்டாண்டர்ட், பிளாட்டினம், கோல்டுக்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு வகைகளை வழங்குகிறது. பதிவுக்கட்டணம் மற்றும் செயல்படுத்தல், உறுப்பினர், சில்வர், குளோபல், டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு கட்டணமில்லை என்றாலும் அவை ஒவ்வொன்றிற்கும் வருட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

SBI உங்களது கணக்கிலிருந்து ரூ.147.5 வசூலித்ததை உங்கள் பாஸ்புக், வங்கி அறிக்கை (அ) எஸ்எம்எஸ் வாயிலாக நீங்கள் பார்த்திருக்கலாம். உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து ஏன் தொகை கழிக்கப்பட்டது என நீங்கள் யோசித்தால், பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு சேவைக் கட்டணத்தின் ஒரு பகுதியாக உங்களிடம் வசூலிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். SBI தன் பயனர்களுக்கு பல விதமான டெபிட்கார்டுகளை வழங்கி வருகிறது. இக்கார்டுகளுக்கு வங்கி ஆண்டு பராமரிப்புக் கட்டணம் ஆக ரூபாய்.125 விதிக்கிறது. இச்சேவை செலவு 18 சதவீதம் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது என்பதே இதற்கு காரணம்.