இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஊழியர்களுக்கு பிஎஃப் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. உலகில் உள்ள மிகப்பெரிய சமூக பாதுகாப்பு நிறுவனங்களில் இபிஎஃப்ஓ நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியர்களின் ரிட்டயர்மெண்ட் நிதி, பிஎஃப், பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் போன்றவற்றை நிர்வகிக்கிறது. இந்நிலையில் இபிஎஃப்ஒ பயனாளிகள் முக்கியமான 6 படிவங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி தற்போது பார்க்கலாம்.

அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் பணிபுரியும் நிறுவனம் செலுத்திய பங்களிப்பு தொகையை தெரிந்து கொள்ள Form 10c படிவம் தேவை. அதன் பிறகு மாத ஓய்வூதியம் பெற வேண்டும் எனில் Form 10D தேவை. இபிஎஃப்ஓ கணக்கில் உள்ள மொத்த தொகையை எடுப்பதற்கும் அதை கடனாக பெற்றுக் கொள்வதற்கும் Form 31 தேவை. நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கும் மாறும்போது பிஎஃப் பணத்தை மாற்றுவதற்கு Form 13 தேவை. ஒருவேளை பயனாளி இறந்துவிட்டால் அவருடைய வாரிசுதாரர் அல்லது நாமினி பிஎஃப் பணத்தை பெறுவதற்கு Form 20 தேவை. மேலும் பயனாளி இறந்துவிட்டால் வாரிசுதாரர் அல்லது நாமினி இன்சூரன்ஸ் திட்டத்தில் பணத்தை பெறுவதற்கு Form 51F தேவை.